உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருநங்கைகளுக்கு   நலத்திட்ட உதவி

திருநங்கைகளுக்கு   நலத்திட்ட உதவி

புதுச்சேரி: மகளிர் தினத்தையொட்டி பாண்டிச்சேரி கிராண்ட் ரோட்டரி கிளப் சார்பில், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருநங்கைகளுக்கு 5 கிலோ அரிசி, போர்வைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சகோதரன் அமைப்பு நிறுவனர் சீத்தல் நாயக் வரவேற்றார். பாண்டிச்சேரி கிராண்ட ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜோசப் சுரேஷ்குமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லஷ்மிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திருநங்கைகளை வாழ்த்தி கவுரவித்தனர். ரோட்டரி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை