உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நலத்திட்ட உதவி: சபாநாயகர் செல்வம் வழங்கல்

நலத்திட்ட உதவி: சபாநாயகர் செல்வம் வழங்கல்

புதுச்சேரி : மணவெளி தொகுதி பயனாளிகளுக்கு, புதுச்சேரி அரசு 15.50 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிக்கான அரசாணையை, சபாநாயகர் செல்வம் வழங்கினார்.புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் ராஜிவ்காந்தி காப்பீட்டு திட்டத்தின் கீழ், மணவெளி சட்டசபை தொகுதியைச் சேர்ந்த குடும்ப தலைவர்களை இழந்த 15 குடும்பங்களுக்கு தலா 30 ஆயிரம் என, மொத்தம் 4.50 லட்சம் ரூபாய்க்கான அரசாணை வழங்கப்பட்டது.அதேபோல, புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் மணவெளி தொகுதியைச் சேர்ந்த 5 வீடற்ற அட்டவணை இன, மக்களுக்கு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக தலா 2.20 லட்சம் என மொத்தம் 11 லட்சம் ரூபாய்க்கான அரசாணையும் அளிக்கப்பட்டது.இதை சபாநாயகர் செல்வம், நேற்று காலை அவரது இல்லத்தில் பயனாளிகளுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில் பா.ஜ. மாநில விவசாய அணி தலைவர் ராமு, பொதுச் செயலாளர் சக்திபாலன், மாவட்ட தலைவர் சுகுமாரன், கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் சக்திவேல், முன்னாள் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், கலைவாணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி