உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., தோற்றது ஏன்? பட்டியலிடுகிறார் இ.கம்யூ., செயலர்

பா.ஜ., தோற்றது ஏன்? பட்டியலிடுகிறார் இ.கம்யூ., செயலர்

புதுச்சேரி: லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்தை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு இ.கம்யூ., நன்றி தெரிவித்துள்ளது.இதுகுறித்து இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்த வாக்காளர்களுக்கு இ.கம்யூ., சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்.,- பா.ஜ., அரசு மக்கள் நலனை முற்றிலும் மறந்ததுடன், மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக எந்த முயற்சியும் எடுக்காமல் துரோகம் இழைத்துள்ளனர்.அரசு பொதுத்துறை நிறுவனங்களையும், பஞ்சாலைகளையும் மூடு விழா நடத்தினர். ரேஷன் கடையை திறக்கவில்லை. மின்சார துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக, என்.ஆர்.காங்.,- பா.ஜ., அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு தேர்தல் மூலம் மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கின்றனர். இந்த மகத்தான தீர்ப்பை அளித்த புதுச்சேரி வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி