| ADDED : மே 10, 2024 01:34 AM
அரியாங்குப்பம்: பக்கவாதத்தால் அவதிப்பட்ட பெண் மனமுடைந்து மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலன், இவர் புதுச்சேரி தீயணைப்பு துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மண்ணம்மாள், 65; இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அதற்கு மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்நிலையில், நோயின் தாக்கும் குறையாமல் இருந்ததால் மனமுடைந்த அவர், கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். பலத்த தீக்காயமடைந்த, அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.