மேலும் செய்திகள்
வலிப்பு நோய்: வி.ஏ.ஓ., சாவு
11-Aug-2024
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சாலையில் திடீரென புகுந்த காட்டு பன்றி மீது மொபட் மோதிய விபத்தில் பெண் இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பகண்டை பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி சுகந்தி, 35; இவர் நேற்று முன்தினம் காலை 8.00 மணிக்கு ஸ்கூட்டி வாகனத்தில் தனது மகன் யோகேஸ்வரனை அழைத்துச் சென்று ராதாபுரத்தில் பள்ளியில் விட்டுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செய்யாத்து வின்னான் ஏரிக்கரையில் சென்றபோது திடீரென குறுக்கே புகுந்த காட்டுப்பன்றி மீது ஸ்கூட்டி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுகந்திக்கு தலையில் பலத்த அடிபட்டது. அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இறந்த சுகந்திக்கு யோகேஸ்வரன், 15; மணிகண்டன்,12; என்ற இரு மகன்கள் உள்ளனர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
11-Aug-2024