/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து போலீசில் மகளிர் மக்கள் மன்றம்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு
போக்குவரத்து போலீசில் மகளிர் மக்கள் மன்றம்; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு
புதுச்சேரி: போக்குவரத்து போலீசில் மகளிர் மட்டுமே பங்கேற்ற பிரத்யேக மகளிர் மக்கள் மன்றம் நடந்தது. போக்குவரத்து கிழக்கு பிரிவில் நடந்த மக்கள் மன்றத்திற்கு சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி தலைமை தாங்கினார். எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மக்கள் மன்றத்திற்கு வந்த மகளிருக்கு போக்குவரத்து போலீசார் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். புதுச்சேரி நகர பகுதியில் நிலவும் போக்குவரத்து பிரச்னைகள், போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்து பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கருத்துக்களை தெரிவித்தனர்.