உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை விபத்தில் தொழிலாளி பலி 

சாலை விபத்தில் தொழிலாளி பலி 

திருக்கனுார்: திருக்கனுார் அருகே சாலை விபத்தில் கூலி தொழிலாளி தலையில் காயமடைந்து இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வடபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 32; கூலிதொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்களான சுரேஷ், 39; புருஷோத்தமன், 35; ஆகியோருடன் ஒரே பைக்கில் திருக்கனுார் வந்தனர்.இரவு மீண்டும் பைக்கில் வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது, மணலிப்பட்டு மேம்பாலம் அருகே சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஷுக்கு தலையில் படு காயமடைந்தார். மற்ற இருவரும் லேசான காயமடைந்தனர்.மூவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, டாக்டர் பரிசோதித்து ராஜேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி