உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓடும் ரயிலில் யோகா செயல்விளக்க நிகழ்ச்சி

ஓடும் ரயிலில் யோகா செயல்விளக்க நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்ற ஓடும் ரயிலில் யோகா செயல்விளக்கம் நிகழ்ச்சி நடந்தது.சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து 'தடம் மாறா வாழ்வுக்கு யோகா' என்ற தலைப்பில் ஓடும் ரயிலில் யோகா செயல்விளக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.விழுப்புரம் ரயில் நிலையம் வரை நடந்த இந்நிகழ்ச்சியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, வாழ்த்தி பேசினார். சர்வதேச யோகா சாம்பியன் பட்டம் வென்ற தசரதன் தலைமை தாங்கினார். இந்தாண்டு 10வது சர்வதேச யோகா தினம் பெண்களின் முன்னேற்றத்திற்கு யோகாவின் பங்கு என்ற கருத்தின் அடிப்படையில் கொண்டாப்படுகிறது.இதையொட்டி இந்நிகழ்ச்சியில் யோகா பயிற்சி பெறும் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் என பலர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை