உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / படைப்புகளை காட்சிப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

படைப்புகளை காட்சிப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி : வளர்கலை கூடத்தில் படைப்புகளை காட்சிப் படுத்த ஆன்லைனில் விண்ணப்பம் வாங்கப்படும் என கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் தெரிவித்தார்.சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி வளர் கலைக்கூடம் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி நடந்தது.கலைப் பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள் பேசியதாவது:புதுச்சேரியில் திறமையான ஓவியர்கள் உள்ளனர். ஆனால் அவர்களது படைப்புகளை காட்சிப் படுத்த சரியான இடம் இல்லாமல் இருந்தது.இதன் காரணமாகவே இந்த வளர் கலைக் கூடம் ஏற்படுத்தப்பட்டது.இப்போது இங்கு ஓவியர்கள் குழுவாக இணைந்து படைப்புகளை விற்பனைக்கு காட்சிப் படுத்தி வருகின்றனர்.ஓவியர்கள் தனித்தனியாகவும் படைப்புகளை வைக்க ஏற்பாடு நடந்து வருகின்றது.இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வழங்கவும் முடிவு செய்து, பணிகளை வேகப்படுத்தி வருகின்றோம்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இந்திரா காந்தி அறிவியல் மைய இயக்குனர் கோபால்.காட்சிக்கலை ஒரு உலகளாவிய பார்வை என்ற தலைப்பில் பேசினார்.புதுச்சேரி ஓவியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்