உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்களை கேலி செய்த வாலிபர் கைது

பெண்களை கேலி செய்த வாலிபர் கைது

நெட்டப்பாக்கம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சரவணன் 30, இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மது குடித்துவிட்டு தனியார் கம்பெனி எதிரில் நின்று கொண்டு கம்பெனியில் இருந்து வெளியில் வரும் பெண்களை கேலி செய்தார். மேலும் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று சரவணனை எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து அவர் அதே இடத்தில் ஆபாசமாக பேசியதால் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி