உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கம்பத்தில் ஸ்கூட்டர் மோதி வாலிபர் பலி

மின் கம்பத்தில் ஸ்கூட்டர் மோதி வாலிபர் பலி

பாகூர், : மின் கம்பத்தில் ஸ்கூட்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.கடலுார் சித்திரப்பேட்டையை சேர்ந்தவர் தமிழ்மாறன் 32; மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அரியாங்குப்பம் ஆர்.கே. நகரை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் புவனா 26; என்பவருக்கும், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பப் பிரச்னை காரணமாக புவனா அரியாங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார். தமிழ்மாறன் அவ்வப்போது, அங்கு சென்று மனைவியை பார்த்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவியை பார்ப்பதற்காக கடலுாரில் இருந்து அரியாங்குப்பம் நோக்கி யமஹா பாசினோ ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.அரியாங்குப்பத்தில் உள்ளதனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் சாலையோரம்இருந்த மின்கம்பத்தில் மோதியது.இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை