| ADDED : டிச 05, 2025 06:56 AM
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், 4வது சோமவாரத்தை முன்னிட்டு, வரும் 8ம் தேதி, 108 சங்காபிேஷகம் நடக்கிறது. கார்த்திகை மாதம் சோமவாரத்தையொட்டி, கோவிலில், 8ம் தேதி காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை நடக்கிறது. அதனை தொடர்ந்து, 6:30 மணிக்கு கணபதி ருத்ர ஹோமம், தொடர்ந்து 8:00 மணி முதல் 9:00 மணி வரை மகா அபிேஷகம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான, சங்காபிேஷகம் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை நடக்கிறது. இரவு 9:00 மணியளவில் அர்த்தஜாம பூஜை நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.