மேலும் செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை
5 hour(s) ago
மா.கம்யூ., கருத்தரங்கம்
5 hour(s) ago
புதுச்சேரி பொறியாருக்கு ஐ.சி.ஐ., அல்ட்ராடெக் விருது
7 hour(s) ago
உள்துறை அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
7 hour(s) ago
காரைக்கால் : இலங்கை அரசு விடுதலை செய்த காரைக்கால் மீனவர்கள் 14 பேர் நேற்று சொந்த ஊருக்கு திரும்பினர்.காரைக்கால் கோட்டுச்சேரி மேட்டைச் சேர்ந்த 14 பேர், அதே பகுதியை சேர்ந்த சிவசங்கர் விசைப்படகில் கடந்த மாதம் 16ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.பின், நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 28ம் தேதி 14 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது. அதையடுத்து, 14 மீனவர்களும் இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். பின், அங்கிருந்து 14 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் அழைத்து வந்து, நேற்று அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago