உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்ற 2 பேர் கைது 

குட்கா விற்ற 2 பேர் கைது 

புதுச்சேரி : புதுச்சேரி, புதிய பஸ் நிலையம் அருகே இருவர், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கு பைக்குடன் நின்றிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து, வண்டியில் இருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர்.அதில், 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், வானுார், கலைவாணன் நகரை சேர்ந்த ராமலிங்கம், 43; ராமகிருஷ்ணன், 35; என்பதும் தெரியவந்தது.இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 45 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள், 90 ஆயிரம் ரொக்கம், ஒரு பைக் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை