உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கார் கவிழ்ந்து 2 பேர் பலி வேப்பூர் அருகே சோகம்

கார் கவிழ்ந்து 2 பேர் பலி வேப்பூர் அருகே சோகம்

வேப்பூர்: வேப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.சென்னை, பாடியைச் சேர்ந்தவர் சபரிநாத்,36; இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் எர்டிகா காரில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். காரை, சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம்,35; ஓட்டினார்.நள்ளிரவு 12:45 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சபரிநாத், பள்ளிக்கரணையைச் சேர்ந்த பிரபாகரன்,36; சம்பவ இடத்திலேயே இறந்தனர்.படுகாயமடைந்த டிரைவர் அப்துல் ஹக்கீம், மதுரவாயல் உதய பாஸ்கர்,38; தரமணி ஜீவன் ராஜ்,20; ஆகிய 3 பேரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை