உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  3 பேரிடம் ரூ.2 லட்சம் மோசடி

 3 பேரிடம் ரூ.2 லட்சம் மோசடி

புதுச்சேரி: வள்ளலார் சாலையை சேர்ந்த வைத்தியநாதன், இவர் ஆன்லைனில் கிரடிட் கார்டு விண்ணப்பித்தார். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி ஊழியர் பேசுவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் மர்ம நபர் அனுப்பிய ஆன்லைன் ஆப்பை டவுன்லோடு செய்து, விவரங்களை உள்ளீடு செய்துள்ளார். பின் அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 822 ரூபாய் மாயமாகியுள்ளது. இதேபோல், குயவர்பாளையத்தை சேர்ந்த புஷ்பராஜ் 81 ஆயிரம். கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ரங்கராஜ் 22 ஆயிரத்து 999 ரூபாய் என மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 821 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி