உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நோணாங்குப்பம் படகு குழாமில் 4 படகுகள் மாயம்; ரூ. 1.50 கோடி இழப்பு

நோணாங்குப்பம் படகு குழாமில் 4 படகுகள் மாயம்; ரூ. 1.50 கோடி இழப்பு

புதுச்சேரி: சுண்ணாம்பாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் படகு குழாமில் இருந்த நான்கு படகுகள் மாயமாகி உள்ளன.பெஞ்சால் புயல் மற்றும் கனமழை காரணமாக வீடூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், நோணாங்குப்பம் படகு குழாமில் படித்துறையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 25 சீட்டு குயில், 24 சீட்டு ரெட்ஸ்னாப்பார், 80 சீட்டு பேரடைஸ் பெரி (பெரிய இரும்பு படகு), 40 சீட்டு பிளம்பிங்கோ, 30 சீட்டு மைனா உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐந்து விசை படகுகள் ஒரே நேரத்தில் கடலுக்கு ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதில், குயில் படகு மட்டும் மரக்காணம் அருகே கடற்கரையோரம் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மற்ற நான்கு படகுகள் கடலில் மாயமானது. மேலும் பேரடைஸ் பீச்சில் அமைக்கப்பட்டிருந்த உணவு விடுதி, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஷவர் பாத் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நிழல் கூடாரங்கள், படகுகளில் ஏறும் மரப்பலகை வழித்தடம், ஆற்றின் முகத் துவாரம் உள்ளிட்ட அனைத்தும் சூறைக்காற்று மற்றும் வெள்ளத்தால் அடித்து சொல்லப்பட்டது.படகு குழாமில் பணிமனையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு என்ஜின்கள் தண்ணீரில் மூழ்கியது. இதுமட்டுமின்றி நிறுத்தி வைத்திருந்த படகுகள் சில ஆற்றில் மூழ்கின. அவை கிரேன் மூலம் நேற்று மீட்கப்பட்டது.வீடுர் அணை வெள்ளத்தால் அரசு படகு குழாமிற்கு 1.50 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ