மேலும் செய்திகள்
அய்யப்பன் கோவிலில் வருஷாபிஷேகம் விமரிசை
24-Nov-2024
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் தனியார் கம்பெனியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கரிக்கலாம்பாக்கம் - பாகூர் சாலையில் உள்ள தனியார் கம்பெனிக்குள் கடந்த ஜூன் 9ம் தேதி இரவு மர்ம நபர்கள் புகுந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கம்ப்யூட்டர், 5 மானிட்டர்களை திருடிச்சென்றனர்.கம்பெனி சீனியர் மேலாளர் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்த சிலரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் கம்பெனியில் வேலை செய்த தனிக்குப்பத்தைச் சேர்ந்த முருகன், அவர் நண்பர்கள் மூலம் திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில், கரிக்கலாம்பாக்கம் தியாகராஜன், கீழ் குமாரமங்கலம் அய்யப்பன், அஜித், செல்லஞ்சேரி அருண்குமார் ஆகியோர் சேர்ந்து திருடியது தெரியவந்தது.அவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
24-Nov-2024