உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 5 பேரிடம் ரூ.1.69 லட்சம் மோசடி

5 பேரிடம் ரூ.1.69 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 5 பேர் மோசடி கும்பலிடம் ரூ.1.69 லட்சத்தை ஏமாந்துள்ளனர். முத்திரையர்பாளையத்தை சேர்ந்த நபரை, தொடர்பு கொண்ட மர்மநபர் பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார். இதை நம்பியவர் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். இதேபோல், பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த நபர், குறைந்த வட்டியில் லோன் பெறுவதற்கு விண்ணப்பித்து, செயலாக்க கட்டணமாக 22 ஆயிரத்து 630 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.கோரிமேட்டை சேர்ந்த நபர் 14 ஆயிரம், லாஸ்பேட்டை சேர்ந்த பெண் 6 ஆயிரம், முத்தியால்பேட்டை சேர்ந்த நபர் ஆயிரத்து 150 என 5 பேர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 780 ரூபாய் ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை