டேக்வாண்டோ சங்கத்தில் 55வது கலர் பெல்ட் தேர்வு
புதுச்சேரி: புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் 55வது கலர் பெல்ட் தேர்வு உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடந்தது.சங்க நிறுவ செயலாளர் சிட்டிபாபு மேற்பார்வையில் நடந்த தேர்வில் சங்கத்தின் இணைப்பு பெற்ற கிங் டைகர் டேக்வாண்டோ பள்ளி, அமேசிங் தேக்வாண்டோ அகாடமி, முதலியார்பேட்டை டேக்வாண்டோ கிளை மற்றும் ஸ்பார்டன் டேக்வாண்டோ அகாடமி சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.ஆனந்து, ராஜ்மோகன், சீரஞ்சீவி, சதீஷ்குமார் ஆகியோர் தேர்வாளராக நியமிக்கப்பட்டனர். கிளை செயலாளர்கள் பிரபாகரன், பாண்டியராஜ் கலந்து கொண்டனர்.உடற்தகுதி மற்றும் டேக்வாண்டோ தொழில்நுட்ப அசைவுகளின் செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேர்ச்சி பெற்ற வீரர்கள் அடுத்த மாதம் நடக்கும் 17 வது மாநில அளவிலான போட்டியில் சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.