மேலும் செய்திகள்
த.வா.க., நிர்வாகி தலைமறைவு இரு தனிப்படைகள் தேடல்
02-Aug-2025
புதுச்சேரி: புதுச்சேரி ரெஸ்டோ பாரில் சென்னை கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பார் உரிமையாளர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை, எஸ்.ஆர்.எம்., கல்லுாரி மாணவர் ஷாஜன், தனது பிறந்த நாள் விழாவை கடந்த 9ம் தேதி இரவு புதுச்சேரி, மிஷன் வீதியில் உள்ள ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பாரில் கொண்டாடினார். அப்போது, ஏற்பட்ட தகராறில், ஷாஜனின் நண்பரான சிவகங்கையை சேர்ந்த மோஷிக் சண்முகபிரியன்,22; பார் ஊழியரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். படுகாயமடைந்த ஷாஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஷாஜனின் நண்பரான, கும்பகோணத்தை சேர்ந்த தேவநேசன், பெரியகடை போலீசில் அளித்த புகாரில் பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, ரெஸ்டோ பார் உரிமையாளர் முத்தியால்பேட்டை ராஜ்குமார், 31; பார் ஊழியர் வில்லியனுார் அசோக்ராஜ், 26; பவுன்சர்கள் டி.வி.நகர் பூபதி (எ) டேவிட், 22; வாழைக்குளம் சஞ்சய்குமார், 21; கடலுார் அரவிந்த், 29; விழுப்புரம் புகழேந்தி, 28; ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, தடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் நேற்று இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும், 5 பேரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.
02-Aug-2025