உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூரில் சாலை மறியல் 66 பேர் கைது

பாகூரில் சாலை மறியல் 66 பேர் கைது

பாகூர : பாகூரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 66 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய போராட்டம் நேற்று நடந்தது.அதன் ஒரு பகுதியாக பாகூரில் நடந்த பந்த் போராட்டத்தின் காரணமாக மெடிக்கல், பால் பூத் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. பாகூர் மேற்கு வீதி - கன்னியக்கோவில் சந்திப்பில் தொழிற் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க தலைவர் சீதநாதன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ராமமூர்த்தி, புதுச்சேரி பால் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் பெருமாள், லெனின், விஜயபாலன், ஆறுமுகம், இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவர் தசரதா, பொதுச் செயலாளர் அமுதா, சி.ஐ.டி.யூ., கலியன், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் அரிதாஸ், பத்மநாபன், இளவரசி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.சாலை மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 66 பேரை, பாகூர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்