உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரகளையில் ஈடுபட்ட 7 பேர் கைது

 ரகளையில் ஈடுபட்ட 7 பேர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். கூனிமேடு பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், 29, சின்னகாலப்பட்டு கணேசன், 42, ஆகியோர், மது போதையில் கனகசெட்டிக்குளம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்ளை பார்த்து ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல் திருபுவனை சந்திப்பு பகுதியில் ரகளை செய்த வி.மாத்துார் ராஜரத்தினம், 26; பரத்ராஜ், 25; வில்லியனுாரில் ரகளை செய்த கணுவாப்பேட் ரவீந்தர், 46; அம்மனங்குப்பம் தேவா, 25; தர்மா, 22, ஆகியோரை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை