| ADDED : நவ 27, 2025 04:34 AM
புதுச்சேரி: அரியூரை சேர்ந்தவரை, மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு 10 லட்சம் வரை குறைந்த வட்டியில் லோன் தருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அவர் லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும் படி கூறியுள்ளார்.அதைநம்பி, மர்மநபருக்கு ரூ. 50 ஆயிரம் செலுத்தினார். அதன்பின், மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதேபோல், முதலியார்பேட்டையை சேந்தவர் 60 ஆயிரத்து 978,திருபுவனையை சேர்ந்தவர் 18 ஆயிரத்து 100, சந்தை புதுகுப்பத்தை சேர்ந்தவர் 15 ஆயிரத்து 200, கூடப்பாக்கத்தை சேர்ந்த பெண் 20 ஆயிரத்து 169, திருபுவனையை சேர்ந்தவர் 15 ஆயிரத்து 400, முதலியார்பேட்டையை சேர்ந்தவர் 28 ஆயிரம் என, 7 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 2 லட்சத்து 7 ஆயிரத்து 847 இழந்துள்ளார். இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.