பள்ளி கல்வித்துறையில் 7 பேருக்கு பதவி உயர்வு; 114 பேர் இடமாற்றம்
புதுச்சேரி; புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வந்த 7 தலைமை ஆசிரியர்கள் துணை வட்ட ஆய்வாளர்ளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வட்டம்-1 துணை ஆய்வாளராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார். துணை ஆய்வாளர்களாக செல்வி (வட்டம்-2), வாஞ்சிநாதன் (வட்டம்-3), திருவரசன் (வட்டம்-4), பூவியரசன் (வட்டம்-5) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதேபோல் காரைக்கால் துணை ஆய்வாளராக மதிவாணன் (வட்டம்-1), ஜெயஜீவன்ராம் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.மேலும், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்கள் (கிரேடு-1) குணசுந்தரி உறுவையாறு அரசு உயர்நிலை பள்ளியில் இருந்து கொம்பாக்கம் பள்ளிக்கும், அரிவரதன் காரைக்கால் டி.ஆர்.பட்டினம் அரசு பெண்கள் பள்ளியில் இருந்து, மடுகரை வி.எஸ்.ஆர். பெண்கள் பள்ளிக்கும், குமாரராசு காரைக்கால் அக்கரை வட்டம் அரசு உயர்நிலை பள்ளியில் இருந்து உறுவையாறு அரசு உயர்நிலை பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் தலைமை ஆசிரியர்கள் (கிரேடு-2) 111 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.