உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரைம் சிட்டியாக மாறும் வில்லியனுார்

கிரைம் சிட்டியாக மாறும் வில்லியனுார்

புதுச்சேரிக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரம் வில்லியனுார். மருத்துவ கல்லுாரிகள், ரியல் எஸ்டேட், மதுபான கடைகள், கஞ்சா, கள்ள லாட்டரி வியாபாரம் என சகலமும் நடக்கிறது. அதுபோல் புதுச்சேரியில் அதிக குற்ற வழக்குகள் பதிவாகும் போலீஸ் நிலையமும் வில்லியனுார் தான். கடந்த 2021ம் ஆண்டு 431 வழக்கும், 2022ம் ஆண்டு 340 வழக்கும், கடந்த ஆண்டு 324 வழக்கும் பதிவாகி உள்ளது.பரந்து விரிந்துள்ள வில்லியனுார் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப போலீஸ்காரர்கள் இல்லை. இதனால் 1 இன்ஸ்பெக்டர், 3 சப்இன்ஸ்பெக்டர் கொண்ட வில்லியனுாரில், 2 சப்இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக கிடக்கிறது.வில்லியனுார் பதற்றம் நிறைந்த பகுதி. கடந்த ஆண்டு பா.ஜ. பிரமுகர் செந்தில்குமார், கன்னகி பள்ளி அருகே உள்ள பேக்கரியில்வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அதே இடத்தில் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.நேற்று முன்தினம் அதே பேக்கரி கடையை முகமூடி கொள்ளையன் உடைத்து பணம் திருடிச் சென்றுள்ளார். இந்த பேக்கரி போலீஸ் நிலையத்தில் இருந்து 400 மீட்டர் துாரத்தில் உள்ளது. போலீசார் கூப்பிடும் துாரத்தில் உள்ள இடத்தில் வரிசையாக 3 கடைகளை உடைத்து முகமூடி கொள்ளையன் பணம் திருடும் வரை போலீசார் குறட்டை விட்டு துாங்கினார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதே நிலை நீடித்தால் வில்லியனுார் பகுதியில் வசிப்பது பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

மகிழ்ச்சியடைந்த அதிகாரி

வில்லியனுாரில் 3 அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் என 4 அதிகார மையங்கள் உள்ளது. இதனால் தகராறு என வருவோரிடத்தில்போலீசார் யார் மீதும் உடனே நடவடிக்கை எடுப்பது இல்லை. சிபாரிசு வரும் வரை காத்திருந்து அதன் பிறகேநடவடிக்கையில் இறங்குகின்றனர். போலீஸ் நிலையத்தில் மாதாந்திர தொகை 4 ஆக பிரிக்கப்படும். 2 எஸ்.ஐ., சென்றபின்பு, 2 பங்குகளாக குறைக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த அதிகாரி, கொலை,கொள்ளை நடப்பது அதிகாரிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி