உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விடுதி ஊழியரை தாக்கிய மர்ம நபருக்கு வலை

 விடுதி ஊழியரை தாக்கிய மர்ம நபருக்கு வலை

புதுச்சேரி: விடுதி ஊழியரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர். லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி, 40; இவர் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் விடுதியில் வரவேற்பாளராக பணி செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி விடுதிக்கு, அடையாளம் தெரியாத நபர், காரில் ஒரு பெண்ணுடன் வந்தார். சிறுநீர் கழிக்க பாத்ரூமை பயன்படுத்தி கொள்ளலாமா என கேட்டார். ஆனால் அந்த நபர் விடுதி அருகே சிறுநீரை கழிக்க முயலவே, அதை விடுதி ஊழியர் தட்டி கேட்டார். அதில், ஆத்திரமடைந்த அந்த நபர், விடுதி ஊழியரை தாக்கி விட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்றார். புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை