மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
பாகூர், : ஓடும் பஸ்சில் இருந்து தனியார் நிறுவன தொழிலாளி, குதித்து காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகூர் அடுத்துள்ள கரையாம்புத்துார் அரசு குடியிருப்பைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 25; இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல், விக்னேஸ்வரன் கரையாம்புத்துாரிலிருந்து பாகூர், கன்னியக்கோவில் வழியாக புதுச்சேரி செல்லும் தனியார் பஸ்சில் வேலைக்கு சென்றார்.பஸ் கன்னியக்கோவில் சென்ற போது, விக்னேஸ்வரன் வார்க்கால் ஓடை சந்திப்பில் பஸ்சை நிறுத்துமாறு நடத்துனரிடம் கூறி உள்ளார். அவர் பஸ் நிறுத்தம் கிடையாது என பஸ்சை நிறுத்த மறுத்தார்.இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, விக்னேஸ்வரன் வார்க்கால்ஓடை பஸ் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்தவில்லை என்றால் கீழே குதித்து விடுவேன் என மிரட்டி உள்ளார். பஸ்சில் இருந்த பயணிகள் அவரை சமாதானம் செய்துள்ளனர். இதனிடையே, பஸ் வார்க்கால்ஓடை சந்திப்பில் நிற்காமல் கடந்து சென்ற போது, விக்னேஸ்வரன் பஸ்சில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். பஸ் நின்று செல்ல நடவடிக்கை தேவை
வார்க்கால் ஓடை கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் தினசரி வந்து செல்கின்றனர். வார்க்கால்ஓடை சந்திப்பில் பஸ் நின்று செல்லாததால், அடிக்கடி தொழிலாளர்களுக்கும், பஸ் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.எனவே, தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களின் நலன் கருதி, வார்க்கால்ஓடை சந்திப்பில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago