சுற்றுச்சூழல் துறை சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் திட்டம் துவக்கம்
பாகூர்: ஏம்பலம் கிராமத்தில், சுற்றுச்சூழல் துறை சார்பில், தாயின் பெயரில் வீட்டுக்கு ஒரு மரம் திட்டத்தை, லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், பசுமை புதுச்சேரி இயக்கத்தின் கீழ், தாயின் பெயரில் வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் வழங்கிட திட்டமிட்டப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா, ஏம்பலம் கிராமத்தில் நேற்று நடந்தது. இதில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஒவ்வொரு வீட்டிற்கும் மரக்கன்றுகள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் நோக்கவுரையாற்றினார்.சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொய்யா, நாவல், எலுமிச்சை, நெல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக் கன்றுகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் உதவி பொறியாளரர் தேவநாதன், திட்ட அதிகாரிகள் பன்னீர்செல்வம், சாந்தலட்சுமி, விமல்ராஜ், தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.