உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தவளக்குப்பம் அரசுப் பள்ளி மைதானத்தில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை தேவை

தவளக்குப்பம் அரசுப் பள்ளி மைதானத்தில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை தேவை

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் சுற்றுச்சுவர் இல்லாததால், அங்கு சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி வருகிறது.தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி 1958ம் ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் விளையாடுவதற்கு 5 ஏக்கர் பரப்பளவில், விளையாட்டு திடல் அமைக்கப்பட்டது. புதுச்சேரியிலேயே அதிக பரப்பளவு கொண்ட இடமாக உள்ளது. மாநில அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவகளுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், பல்வேறு விளையாட்டு போட்டிக்கு பயிற்சி கொடுக்கும் இடமாக இருக்கிறது. பள்ளி வளாகத்தில் உள்ள ராஜிவ்காந்தி அரசு கலை கல்லுாரி மாணவர்களும் அங்கு விளையாடி பயனடைந்து வருகின்றனர்.மழை காலங்களில் அப்பகுதியில், மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. மேலும், புதர்கள் மண்டி பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், மாணவர்கள் விளையாடுவதற்கு அச்சமடைந்து வருகின்றனர். விளையாட்டு திடலை சுற்றி இருந்த சுற்றுச்சுவர் பழுதடைந்து கொஞ்சம், கொஞ்சமாக கீழே விழுந்து வருகிறது.திறந்தவெளியாக உள்ள திடலில், இரவு நேரங்களில், குடி மகன்கள், மது குடித்து விட்டு, பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். இரவு நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அந்த இடம் திறந்த வெளி மது பாராகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி வருகிறது.பள்ளி கல்வித்துறையினர், சுற்றுச்சுவர் அமைக்கவும், திடலை மேம்பாடுத்துவும், இரவு நேரங்களில், வாட்ச்மேன் அமைத்து, விளையாட வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை