புதுச்சேரி : மத்திய,மாநில அரசுகளை கண்டித்து அ.தி.மு.க.,சார்பில் வரும் 10ம் தேதி நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் ,சண்முகம் கலந்து கொள்கிறார்.மத்திய அரசைக் கண்டித்தும், புதுச்சேரியை ஆளும் அரசு, ரேஷன் கடைகளைத் திறக்காதது, பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தாதது, அரசு சார்பு நிறுவனங்களை படிப்படியாக மூடியது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததை கண்டித்து புதுச்சேரி அ.தி.மு.க., வரும் 10ம் தேதி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு முன்னாள் அமைச்சருமான சண்முகம் எம்.பி., தலைமையில் நடைபெற உள்ளது.இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அ.தி.மு.க.,மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள்,பிற அணி நிர்வாகிகள், தொகுதி, நகர,வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். அவைத் தலைவர் அன்பானந்தம், ஜெ.,பேரவை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், அசனா,ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள்,மகாதேவி,திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.புதுச்சேரிக்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காததில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.