கவர்னர், டி.ஜி.பி., ஆலோசனை
புதுச்சேரி : புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு குறித்து கவர்னர் கைலாஷ்நாதன், டி.ஜி.பி., யை அழைத்து ஆலோசனை நடத்தினார்.கவர்னர் கைலாஷ்நாதன் புதுச்சேரியில் பல்வேறு பகுதிக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். சட்டம் ஒழங்கு தொடர்பாக கவர்னர் மாளிகையில், நேற்று டி.ஜி.பி., ஷாலினி சிங் அழைத்து சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டறிந்தார். அப்போது கவர்னர், புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு பாதுகாக்க போலீசார் சிறப்பாக செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் போலீஸ் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.