ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து அகற்ற வேண்டும்
புதுச்சேரி; புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து அகற்ற ஒத்துழைக்க வேண்டும் என, கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தி உள்ளார். கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி உழவர்கரை நகாட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில்உள்ள பேனர்கள், கட்-அவுட் அகற்ற முடிவு செயயப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்டுள்ள நாட்களில் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள்,வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும். கட்-அவுட், பேனர்கள், கொடி கம்பங்கள், வைத்துள்ளவர்கள் தானாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.