உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரை வியாபாரிகள் அரை நாள் கடையடைப்பு

உழவர்கரை வியாபாரிகள் அரை நாள் கடையடைப்பு

புதுச்சேரி : உழவர்கரை தொகுதி வியாபாரிகள் சங்கம் சார்பில் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடந்தது.புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட புதுச்சேரி இந்திரா சிக்னலில் இருந்து அரும்பார்த்தபுரம் வரை உள்ள வியாபாரிகள் அரை நாள் கடையடைப்பு நடத்தப்படும் உழவர்கரை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி நேற்று காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இந்திரா சிக்னல் முதல் அரும்பார்த்தபுரம் வரை உள்ள கடைகளை மூடி தங்கள் இரங்கலை வெளிப்படுத்தினர். முன்னதாக காலை 9:30 மணிக்கு, வழக்கறிஞர் சசிபாலன் தலைமையில் வியாபாரிகள், வில்லியனுார் மெயின்ரோடு, விநாயக முருகன் பேக்கரி அருகே மவுன அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி