மேலும் செய்திகள்
தீபாவளி தொகுப்பு அமைச்சர் உத்தரவு
16-Oct-2025
புதுச்சேரி: தீ பாவளி பரிசு பொருட்கள் மற்றும் மாதாந்திர இலவச அரிசி வழங்காததை கண்டித்து அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவினர் ரேஷன் கடையை பூட்ட முயன்றதால் பரபரப்பு நிலவியது. மாநிலத்தில் உள்ள 3.46 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கும் தீபாவளி தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சமையல் எண்ணெய், ஒரு கிலோ கடலை பருப்பு, தலா அரை கிலோ ரவை மற்றும் மைதா என, ரூ. 585 மதிப்புள்ள தீபாவளி தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி கடந்த 17 ம் தேதி துவக்கி வைத்தார். ஆனால், இந்த தீபாவளி இலவச தொகுப்பு இதுவரை நெல்லித்தோப்பு தொகுதியில் வழங்கப்படவில்லை. மேலும், மாதாந்திர இலவச அரிசியும் 2 மாதமாக வழங்கவில்லை. இதனை கண்டித்து, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவினர் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் நேற்று ஊர்வலமாக சென்று, சாரத்தில் உள்ள ரேஷன் கடையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பின்னர், திடீரென ரேஷன் கடை ெஷட்டரை இழுத்து பூட்ட முயன்றனர். அதனை போலீசார் தடுக்க முயலவே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார், குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு நிலமையை கூறினர். அதனையேற்று குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் உடனடியாக தீபாவளி தொகுப்பு மற்றும் ரேஷன் அரிசி வழங்குவதாக உறுதி அளித்தனர். அதனையேற்று ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
16-Oct-2025