உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் அ.தி.மு.க., பொருளாளர் வழங்கல்

 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் அ.தி.மு.க., பொருளாளர் வழங்கல்

புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவி களை அ.தி.மு.க., பொருளாளர் ரவி பாண்டுரங்கன் வழங்கி வருகிறார். அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், பணியாற்றும் பெண்களுக்கு ரவி பாண்டுரங்கன் தனது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அதன்படி, 3ம் கட்டமாக பி.சி.பி. நகர், அம்பேத்கர் நகர், அருந்ததி புரம், சொர்ணா நகர், ஸ்ரீராம் நகர், கோட்டைமேடு, சண்முகம் நகர் பகுதிகளை சேர்ந்த 500 பெண்களுக்கு சில்வர் அண்டாவை பொருளாளர் ரவி பாண்டுரங்கன் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஜெ., பேரவை செயலாளர் ஜீவா, இலக்கிய அணி தட்சிணாமூர்த்தி, மீனவரணி இணை செயலாளர் ரவி, வார்டு செயலாளர்கள் ஜெயக்கு மார், பன்னீர், கோபி, ரங்கநாதன், முனியப்பன், வார்டு துணைச் செயலாளர் அன்பு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை