மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
3 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
3 hour(s) ago
புதுச்சேரி : கிருமாம்பாக்கத்தில் பொன்வண்டு சோப்பு தயாரிக்கும் புஷ்பம் தொழிற்சாலையில், எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது.கிருமாம்பாக்கம், ஈச்சங்காட்டில் பொன்வண்டு சோப்பு தயாரிக்கும் ஸ்ரீபுஷ்பம் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இங்கு, புதுச்சேரி சுகாதாரத்துறையின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், எச்.ஐ.வி., குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரிகள் கஸ்துாரி, சந்தனபாலாஜி, ஜீனத், மணிவாசகம், யோகராஜ் ஆகியோர் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். முன்னதாக தொழிற்சாலை மேலாளர் தம்பிராஜ் வரவேற்றார். கம்பெனியின் மனிதவள மேம் பாட்டு அதிகாரி பிரித்தி நன்றி கூறினார். முகாமில் தொழிற்சாலையில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
3 hour(s) ago
3 hour(s) ago