உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சைப்ரஸ் நாட்டில் தொழிற்சங்க மாநாடு ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் பங்கேற்பு

 சைப்ரஸ் நாட்டில் தொழிற்சங்க மாநாடு ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் பங்கேற்பு

புதுச்சேரி: சைப்ரஸ் நாட்டு தொழிற்சங்க பேரவை மாநாட்டில் புதுச்சேரி ஏ.ஐ.டி.யூ.சி., மாநில த லைவர் தினேஷ் பொன்னையா பங்கேற்கிறார் கிழக்கு மெடிட்டேரியன் கடல் பகுதியில், தீவு நாடான சைப்ரஸ் குடியரசு அமைந்துள்ளது. இந்த நாட்டின் அனைத்து சைப்ரஸ் தொழிலாளர் கூட்டமைப்பு மாநாடு நாளை (4ம் தேதி ) நாளை மறுதினம் 5 ஆகிய தேதிகளில் தலைநகர் நிக்கோஷியாவலில் நடக்கிறது. முன்னதாக இன்று போர்கள் மற்றும் ராணுவ மையத்தை நிறுத்துவோம் என்ற தலைப்பில் சர்வதேச கூட்டம் நடக்கிறது. மாநாட்டை வாழ்த்தி பேசவும், சர்வதேச கூட்டத்தில் உரையாற்றிடவும் இந்திய நாட்டின் தொழிலாளர்களை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில், ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் தினேஷ் பொன்னையா சைப்ரஸ் செல்கிறார். அவரை வழி அனுப்பும் நிகழ்ச்சி இன்று ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தில் நடந்தது. இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், நிர்வாக குழு உறுப்பினர் கலைநாதன், மாநில பொருளாளர் சுப்பையா, ஏ.ஐ.டி.யு.சி., மாநில கவுரவத் தலைவர் அபிஷேகம், பொதுச்செயலாளர் அந்தோணி, இளைஞர்பெரு மன்ற மாநில செயலாளர் எழிலன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைத் தலைவர்கள் சந்திரசேகரன், முருகன், மோதிலால், சேகர், செயலாளர்கள் செல்வம், முத்துராமன், ஹேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை