உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அம்மன் மகிஷா சூரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலிப்பு

அம்மன் மகிஷா சூரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலிப்பு

புதுச்சேரி: நவராத்திரியை முன்னிட்டு லாஸ்பேட்டை சவுடாம்பிகை கோவிலில் அம்மன் நேற்று மகிஷா சூரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். லாஸ்பேட்டை சவுடாம்பிகை அம்மன் கோவிலில் 23ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்து வந்தார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் அம்மன் மகிஷா சூரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக தேவாங்க குல வீரகுமாரர்கள் வாள் வாங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, அம்பு விடுதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி