உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., அமைப்பு தேர்தல் அதிகாரிகள் நியமனம்

பா.ஜ., அமைப்பு தேர்தல் அதிகாரிகள் நியமனம்

புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., அமைப்பு தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.இதுகுறித்து பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார் விடுத்துள்ள அறிக்கை:பா.ஜ., சார்பில் அகில இந்திய அளவில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் முன்னிலையில், புதுச்சேரி பா.ஜ., அமைப்பு தேர்தல் அதிகாரியாக மாநில துணை தலைவர் அகிலன் நியமிக்கபட்டார்.கட்சியின் அமைப்பு தேர்தலை சிறப்பாக நடத்த மாநில அமைப்பு தேர்தல் அதிகாரி அகிலன், மாவட்ட வாரியாக அமைப்பு தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளார். அதன்படி நகர் மாவட்ட அமைப்பு தேர்தல் அதிகாரியாக ரவிச்சந்திரன், துணை அதிகாரியாக ராஜகணபதி, உழவர்கரை மாவட்ட அமைப்பு தேர்தல் அதிகாரியாக நாகராஜன், துணை அதிகாரியாக லதா, அரியாங்குப்பம் மாவட்ட அமைப்பு தேர்தல் அதிகாரியாக சிவகுமார், துணை அதிகாரியாக பாரதி மோகன், வில்லியனுார் மாவட்ட அமைப்பு தேர்தல் அதிகாரியாக முன்னாள் எம்.எல்.ஏ., தங்க விக்ரமன், துணை அதிகாரியாக அனந்தன், காரைக்கால் மாவட்ட அமைப்பு தேர்தல் அதிகாரியாக புகழேந்தி, துணை அதிகாரியாக இளங்கோவன் நிமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ