உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரியப்பாளையம் பாலம் திறந்த 2 மாதத்தில் விரிசல் 

ஆரியப்பாளையம் பாலம் திறந்த 2 மாதத்தில் விரிசல் 

வீடியோ வைரலால் பரபரப்பு புதுச்சேரி: ஆரியப்பாளையம் பாலம் திறந்த 2 மாதத்திற்குள் விரிசல் விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.புதுச்சேரி - விழுப்புரம் இணைக்கும் முக்கிய வழித்தடமான தேசிய நெடுஞ்சாலையில், சங்கராபரணி ஆற்றுப்பாலம் கடந்த 2022 பிப்., 11ம் தேதி கட்டும் பணி துவங்கியது. ரூ. 60 கோடி மதிப்பில் 360 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்பட்டது. பாலத்தை கடந்த அக். 28 ம் தேதி ப கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தனர். இந்நிலையில் இந்த பாலத்தின் கிழக்கு பகுதி இணைப்பு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதை மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர். பாலத்தில் விரிசல் விழுந்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்; பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. மண் இருகும் போது இதுபோன்ற பிரச்னை வரும். பாலத்தை 5 ஆண்டிற்கு பராமரிக்க கட்டிய கட்டுமான நிறுவனத்திடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால் விரிசல் சரிசெய்யப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ