உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதையில் ரகளை செய்தவர் கைது

போதையில் ரகளை செய்தவர் கைது

புதுச்சேரி : சேதராப்பட்டில் மது போதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.சேதராப்பட்டு பிப்டிக் தொழிற்பேட்டையில் சாலையில் நின்று கொண்டு மது போதையில் ஒருவர் நேற்று அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி ரகளை செய்து கொண்டிருந்தார். தகவலறிந்த சேதராப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். வானுார் அடுத்த ஆதனப்பட்டு பகுதியை சேர்ந்த முருகன், 38; என தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை