உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை  செய்தவர் கைது

பொது இடத்தில் ரகளை  செய்தவர் கைது

திருபுவனை : திருபுவனை அருகே பொது இடத்தில் ஆபாசமாக பேசி, ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜிவ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் ரோந்து சென்றனர். மதகடிப்பட்டு சந்தைதோப்பு அருகே குடிபோதையில் ஒருவர் நின்று கொண்டு அவ்வழியே சென்றவர்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் விழுப்பரம் மாவட்டம், வி.அகரம் அடுத்த சுந்தரிப்பாளையத்தை சேர்ந்த சோமு, 38, என தெரிய வந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை