உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

புதுச்சேரி: பழங்கால பாறை ஓவியங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.புதுச்சேரி அலையான்ஸ் பிரான்ஸ்சில், பழங்கால பாறை ஓவியங்கள் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதில், பழங்கால வராலற்று வாழ்க்கை முறைகள், மனிதர்கள் பயன்படுத்திய விலங்குகள் என பல்வேறு ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. இந்த ஓவியங்கள், மாணவர் மற்றும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.கண்காட்சியை நடத்திய ஓவியர் முனுசாமி கூறுகையில், 'பழங்கால பாறை ஓவியங்கள் தற்போது அழிந்து வருகிறது. இந்த ஓவியங்களை பாதுகாப்பதற்கு தான் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். விழுப்புரம் அருகே உள்ள கீழ்வலை கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு பாறைகளில், ஓவியங்களை வரைந்துள்ளனர். இந்த ஓவியங்களின் சிறப்புகள் பற்றி புதுச்சேரி தாகூர் கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கட்டுரையாக எழுதி புத்தகம் வெளியிட்டுள்ளார். பாறை ஓவியங்களை கிடைப்பது அரிது. அவற்றை அரசு பாதுகாத்து,பராமரிக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ