| ADDED : பிப் 18, 2024 05:07 AM
புதுச்சேரி: புதுச்சேரி, பெரியார் நகரில் இயங்கி வரும் பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், பள்ளி வகுப்பறையில் உபயோகமற்ற காகிதம், நெகிழிப் பைகளை வைத்து பூங்கொத்து, பொம்மைகள், தோரணங்கள், பென்சில் பாக்ஸ், சாக்பீஸ் ஸ்டேன்ட், குப்பை கூடை போன்ற பள்ளிக்கு தேவையான பொருட்களை மாணவர்களே தாயரித்தனர்.கிச்சன் கழிவுகள், காய்கறி மற்றும் பழங்களின் தோலை வைத்து அழகு உபகரணங்கள் செய்தல், அழுகிய காய்கறி, பழங்களில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது குறித்து உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் தன்னார்வாலர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.மக்கும், மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மக்கும் குப்பைகள் மூலம் இயற்கை உரம் தாயரித்து பள்ளி வளாத்தில் உள்ள தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் நன்றி தெரிவித்தார்.