மேலும் செய்திகள்
பாலக்காடு ஐ.ஐ.டி., யில் எலக்ட்ரிக்கல் பயிலரங்கம்
05-Oct-2026
புதுச்சேரி: புதுச்சேரி பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, டிஸ்லெக்சியா சங்கம், ஆட்டிசம் நல சங்கம் சார்பில், டிஸ்லெக்சியா மற்றும் ஆட்டிசம் குறித்த திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு பயிலரங்கம் இன்று (அக்.,31) நடந்தது. காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த பயிலரங்கை அமைச்சர் சிவக்கொழுந்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சமக்ர சிக் ஷா அபியான் மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா, மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையின் இணை இயக்குநர் புவனேஸ்வரி வாழ்த்தி பேசினர். இதில், ஜிப்மர் முன்னாள் -பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் நளினி, ஜிப்மர் முன்னாள் டீன் டாக்டர் மகாதேவன் ஆகியோர் பங்கேற்று, டிஸ்லெக்சியா மற்றும் ஆட்டிசம் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து விளக்கி பேசினர். பிரிட்ஜஸ் லேர்னிங் பள்ளியில் இயக்குநரும், டிஸ்லெக்சியா மற்றும் ஆட்டிசம் நல சங்கத்தின் நிறுவனர் புவனா வாசுதேவன் வாசித்தல், எழுத்துக் கூட்டுதல், கருத்துணர்வு, எழுதுதல், நினைவாற்றல், கணிதம் உள்ளிட்ட அடிப்படை கற்றல் திறன்களை நேரடி செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும், எளிய கதைகள், செயல்பாடுகள், நினைவூட்டல் உத்திகள், விளையாட்டுகள் மற்றும் படிப்படியான பயிற்சிகள் மூலம் டிஸ்லெக்சியா கொண்ட குழந்தைகளுக்கு கற்றலை எவ்வாறு எளிமையாக்கலாம் என விளக்கினார். தொழில்சார் சிகிச்சை பேராசிரியர் ஷஷிதர் ராவ், குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் ரத்தீஷ், டாக்டர் தனா பிரபாகரன் ஆகியோர் ஆட்டிசம் குறைபாடுகள், உணர்வு புலன் சார்ந்த சவால்கள், தகவல் தொடர்பு, நடத்தை புரிதல், குழந்தைகளின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்ற ஆதரவு முறைகள் குறித்து விளக்கினர். பயிலரங்கில், குழந்தைகளின் உணர்வுப் பூர்வமான தேவைகளை புரிந்து கொண்டு அன்றாட வாழ்க்கையிலும், கல்வி சூழலிலும் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான நடைமுறை உத்திகள் விளக்கப்பட்டன. பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில், கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், கல்வி உளவியலாளர்கள், மனநல டாக்டர்கள், சிறப்பு கல்வியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
05-Oct-2026