உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொக்லைன் டிரைவர் லாரி மோதி பலி

பொக்லைன் டிரைவர் லாரி மோதி பலி

திருக்கனுார், : லாரி மோதி, பொக்லைன் டிரைவர் இறந்தார்.திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான புதுக்குப்பம் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 52; கல்குவாரியில் பொக்லைன் டிரைவர். இவரது மனைவி உஜ்வாலா. இரண்டு மகன்கள் உள்ளனர்.நேற்று காலை திருமங்கலம் சிவன் கோவிலில் நடந்த தனது அண்ணன் மகள் திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு, பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே முன்னால் சென்ற லோடு லாரியை, முந்த முயன்றார். அப்போது, எதிரே பள்ளி மாணவர்கள் ஓடிவந்த பைக், எதிர்பாராத விதமாக சக்திவேல் பைக் மீது மோதியது. கீழே விழுந்த சக்திவேல் தலையில் லாரியின் பின் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவத்திற்கு இடத்திற்கு விரைந்து, சக்திவேல் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை