உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாண்டெக்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் 

பாண்டெக்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் 

புதுச்சேரி: புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் பாண்டெக்ஸ் நிறுவனத்தில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 60 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கிடையே, முதல்வர் ரங்கசாமி கடந்த பட்ஜெட்டியில் பாண்டெக்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.இதையடுத்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய 60 மாத நிலுவை சம்பளத்தில், 5 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இருப்பினும், இதுவரையில் வழங்கப்படவில்லை.இதை கண்டித்து, சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகி கொளஞ்சியப்பன், பாரதிய மஸ்துார் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி ஆகியோர் தலைமையில் பாண்டெக்ஸ் தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக பணிகளை புறக்கணித்து, அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதில், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து 5 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணியில் உள்ள பொது மேலாளரை மாற்றம் செய்ய வேண்டும். அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் பாண்டெக்ஸ் நிறுவனத்திற்கு வரவேண்டிய நிலுவை தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை