உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரியில் பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரி:புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.புதுச்சேரி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. சிறுமிக்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகள் கண்டன குரல் எழுப்பின. மகளிர் தினம் கொண்டாடப்படும் நேற்று 8ம் தேதி இண்டியா கூட்டணி, அ.தி.மு.க., தனித்தனியே 'பந்த்' அறிவித்தன.திட்டமிட்டப்படி நேற்று காலை 6:00 மணிக்கு 'பந்த்' துவங்கியது. நகர பகுதியில் பெரிய வணிக வளாகம் முதல் சிறிய பெட்டிக்கடை வரை அனைத்துமே மூடப்பட்டு இருந்தன. உள்ளூர், வெளியூர் பயணியரால் நிரம்பி வழியும் புது பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது. புதுச்சேரியில் இருந்து சென்னை, காரைக்கால் என வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.'பந்த்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த கட்சிகள் தேர்வு நடப்பதால், பள்ளி கல்லுாரி பஸ்களை தடுத்து நிறுத்த மாட்டோம் என்று அறிவித்து இருந்தன. இதனால் பள்ளி பஸ்கள், வாகனங்கள் இயக்கப்பட்டன.எனினும், புதுச்சேரியில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலங்கள் வழக்கம்போல் இயங்கின. அரசு ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

ராஜ் பவன் முற்றுகை

இண்டியா கூட்டணி கட்சியினர், காலை 10:00 மணிக்கு ராஜா தியேட்டர் எதிரில் கூடினர். அங்கிருந்து காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் மாநில அரசை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட, நேரு வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். பேரிகார்டுகளை தாண்டிச் சென்ற சிலர், கவர்னர் மாளிகை முன் நின்று, அரசுக்கு எதிராக கோஷமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், கவர்னர் மாளிகை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி