பாங்க் ஆப் பரோடா வங்கி கிளை இடமாற்றம் செய்து திறப்பு விழா
புதுச்சேரி : பாங்க் ஆப் பரோடா வங்கியின் சின்னியம்பேட்டை கிளை இடமாற்றம் திறப்பு விழா நடந்தது.இந்தியாவின் முன்னோடி வங்கியான பாங்க் ஆப் பரோடா, நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களில் தனது கிளைகளை தொடர்ந்து, விரிவுபடுத்தி வருகிறது. சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி, தொழில் அபிவிருத்திக்கு கைகொடுத்து வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, சின்னியம்பேட்டை வங்கி கிளை, அதே பகுதியில் செக் போஸ்ட் அருகே இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது. வங்கியின் புதுச்சேரி பிராந்திய தலைவர் ரவி தலைமை தாங்கி, திறந்து வைத்தார். துணை பிராந்திய தலைவர் பிரகாஷ் பேசுகையில், '2017ம் ஆண்டு சின்னியம்பேட்டையில் வங்கி கிளை துவங்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கி வந்தது. தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய முகவரியில் மேலும் சிறப்பாக செயல்படும்' என தெரிவித்தார். ஏற்பாடுகளை கிளை மேலாளர் பிரபு, உதவி மேலாளர் பூவரசன் செய்தனர்.பிராந்திய அலுவலக ஊழியர்கள் விக்னேஷ் பாபு, கோபிநாத், கோபாலகிருஷ்ணன், வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.